×

மசாலா சென்னா

தேவையானவை:

வெள்ளை சென்னா ஒரு கப்,
மிளகாய்த்தூள்,
சீரகத்தூள் தலா அரை டீஸ்பூன்,
மிளகுத்தூள் ஒரு சிட்டிகை,
சாட் மசாலா ஒரு டீஸ்பூன்,
மாங்காய்த்தூள் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
கால் டீஸ்பூன்,
பொடித்த வெல்லம் ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

சென்னாவை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சென்னாவுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மூடியைத் திறந்து, தண்ணீரை வடிக்கவும். கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலக்க, மசாலா சென்னா தயார்!

The post மசாலா சென்னா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...